புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப உதவியுடன் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் அருகில் உள்ளாரா என்பதை எச்சரிக்கும் வகையில், ஆரோக்கிய சேது என்ற செயலியை(ஆப்) மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஸ்மார்ட் போன்களில் செயல்படும் இந்த செயலி, தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் செயல்படும்.
தொழில்நுட்ப உதவியுடன் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் அருகில் உள்ளாரா என்பதை எச்சரிக்கும்